Monday, August 11, 2014

நேரம்

வெளியில்  வித்தியாசம்
இருக்கையில் மட்டுமே இருக்கும்
நேரம்.

நடை

நண்பர்களோடு நடந்ததில்
நான் நடக்கவேயில்லை.

அக்கினிக்குஞ்சு!

அக்கினி குஞ்சொன்று கண்டேன் -- அதை
அங்கொரு காட்டிலொர் பொந்திடை வைத்தேன்!
மெதுவாகவே வேகிறது காடு!

Thursday, February 6, 2014

அயலும் புடையும் நின்ற என் அன்பே!

என் அன்பே!
நீயே வாழ்வு.
மற்றவை எல்லாம் மரணம் மட்டுமே!

என் அன்பே!
நீயே இலக்கணம்.
மற்றவை எல்லாம் இலக்கணப் பிழைகளே!

என் அன்பே!
நீயே ஆனந்தம்.
மற்றவை எல்லாம் ஆனந்த நிழல்களே!

என் அன்பே!
நீயே ஒளி.
மற்றவை எல்லாம் ஒளியூட்டப்பட்ட பொருள்களே!

என் அன்பே!
இல்லாததே நீ!
இருக்கின்ற மற்றெல்லாமும் நீயே!